எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலாசிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண்பட்ட அரசியல்வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
இவர், ஏழை எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சிமிகு எழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதை. அடக்கத்தின் வடிவம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நாட்டு மக்களுக்கு நல்கியவர்; முதன்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர்; மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான்; மாபெரும் ஜனநாயகத் தலைவர்.
திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதி, சுயமரியாதைக் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைவாசம் ஏற்றார். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியாருக்கு அன்புப் பரிசு என்று அறிவித்தார். தமிழ் மக்களின் சிந்தனையில் படிந்துகிடந்த அழுக்குகளை அகற்றி தமிழகத்தை மாற்றியமைக்க தம் நாவையும், எழுதுகோலையும், இறுதி மூச்சு வரை பயன்படுத்தினார்.

0 Comments:
Post a Comment