"ரோட்டோர கடையில் சாப்பிட்ட நினைவுகளை
மறக்க நினைக்கும் டாலர் கனவுகள்"
"சிரிக்கும் குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
சிரிக்கும் அரசியல்வாதியின் சிரிப்பில் ??"
ரோட்டோர மரத்தை வெட்டும் அரிவாளுக்கு தெரியுமா
அந்த மரம் கடந்து வந்த சுகமும் துக்கமும்
"கடவுளே எனக்கு நீ இதை கொடு
உனக்கு நான் அதை தருகிறேன்
கடவுள் மனிதன் வியாபார ஒப்பந்தம்
வியாபாரி ஆகும் கடவுள்"
"சரியான சில்லறை தரவும் சொன்ன பேருந்தில்
கால தாமதமாய் நான்"
"வறுமையில் குடும்பம் பலி உச்சு கொட்டும்
பதுக்கல் அரசியல்வாதி"
0 Comments:
Post a Comment