நீண்டகாலம் உழைக்கக் கூடிய பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. காகிதத்தில் தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் ஓராண்டு காலம் வரையில்தான் நன்றாக இருக்கின்றன. அதன்பின் அதில் அழுக்கு, கறை படிந்துவிடுவதுடன் துளைகள் விழுவது, கிழிந்து போவது, தொய்ந்து விடுதல் போன்றவை நடக்கின்றன.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு நீண்ட காலம் உழைக்கக் கூடிய பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் 5 ஆண்டுகாலம் வரையில் நன்றாக உழைக்கக் கூடியது.
இதில் கள்ளநோட்டுக்களை தயாரிக்கவே முடியாது. மழையில் நனைந்தாலும் அது பாதிப்பு அடையாது. இவ்வளவு சிறப்பான காரணங்களால் முதலில் 10 ரூபாய் நோட்டுக் களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதற்காக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. முதலில் 100 கோடி 10 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட உள்ளன. பிளாஸ்டிக் நோட்டுக்கள் ஆஸ்தி ரேலியாவில்தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment