இந்திய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் உலகத்தமிழ்செம்மொழி மாநாட்டை தொடங்கிவைத்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். முனைவர்வா.செ.குழந்தைசாமி, அமெரிக்க நாட்டு பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இலங்கை நாட்டு பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பேராசிரியர் சிவத்தம்பி வாழ்த்துரை வழங்கும் போது, ’உலகம் முழுவதும் பரவியிருக்கிறது தமிழ். இது உலக மொழியாக,செம்மொழியாக பரவியிருக்கிறது.
இந்த சமயத்தில் முதல்வர் கருணாநிதியை நான் கேட்டுக் கொள்கிறேன், வெளியில் வாழும் தமிழர்கள், தமிழ் மீது பற்று கொண்ட தமிழரல்லாதோர் என அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும், போதிக்கும் நூல் ஒன்றைக் கொண்டு வர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது, அவசியமானது.
தமிழை மேம்படுத்த நாம் இன்னும் வெகு தூரம் போக வேண்டும். உதாரணத்திற்கு டாட் காம் என்ற வார்த்தைக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை. அதை நாம் உருவாக்க வேண்டும்.
சங்கத் தமிழ் இலக்கியம் சமயச் சார்பற்ற இலக்கியம். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று போதித்தவர்கள் தமிழர்கள் என்றார்.
பதிவுலக நண்பர்கள் இந்த வார்த்தையை தமிழ்ப்படுத்த முயற்சிக்கலாமே.
Friends
|
|
Browse: Home > டாட் காம் என்ற வார்த்தைக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை: செம்மொழி சிவத்தம்பி
0 Comments:
Post a Comment