பெட்ரோல், டிசல், மற்றும் சமையல் கியாஸ் விலை உயருமா?
சில தினங்களாவே பெட்ரோல், டீசல், விலையினை சர்வதேச சந்தையின் கச்சா எண்ணை விலைக்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசை பெட்ரோலிய நிறுவனங்கள் கேட்டு வருகின்றன.
இப்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல் , டீசல் விலைகள் ஒரு பேரல் கச்சா எண்ணை $60 என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டவை . ஆனால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணையின் இன்றைய விலை $77 ஆகும். கச்சா எண்ணையின் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்த வேண்டும் என பெட்ரோலிய எண்ணை நிறுவனங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி வலியுருர்துகின்றன .
குட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மத்திய அரசோ , மதில் பூனையாக மக்கள் மனதை ஆராய்ந்து வருகிறது .ஏற்கனவே பணவீக்கத்தில் இருக்கும் இந்தியா இந்த பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வால் மேலும் அதிகரித்துவிடும் என்றும் , முக்கிய குட்டணி கட்சித் தலைவர்கள் (சரத் பவார், மம்தா பானர்ஜி ) பலர் கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாலும் , நிலையான முடிவை எடுக்க முடியாமல் மத்தியில் ஆளும் அணி திணறுகிறது .
விலை உயர்வை பற்றி ஆலோசிக்க முக்கிய மந்திரிகள் குட்டம் வருகிற 25 -6 -2010 அன்று நடைபெறுகிறது .
நன்றி .
0 Comments:
Post a Comment