அமெரிக்க டாலர், ஐரோப்பிய டாலர், பிரிட்டன் பவுண்டு போன்றவற்றுக்கு உள்ளதுபோல் ஒரு அடையாளக் குறியீட்டை இந்திய ரூபாய்க்கும் இடவிருக்கிறது இந்திய அரசு. இந்த அடையாளக் குறியீடு இன்று இறுதி செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலர், ஐரோப்பிய டாலர், பிரிட்டன் பவுண்டு என்று அடையாளக் குறியீடுகள் உள்ளன. இந்த அடையாளக் குறியீட்டைப் பார்த்ததுமே இது அமெரிக்க டாலர், இது ஐரோப்பிய டாலர், இது பிரிட்டன் பவுண்டு என்பது புரிந்துவிடும். இந்த அடையாளக் குறியீடுகள் அந்தந்த நாட்டு ரூபாய் நோட்டுகளிலும் தவறாமல் இடம் பெறும்.
இதேப் போன்று நம் நாட்டு ரூபாய்க்கும் ஒரு அடையாளக் குறியீடு தேவை என்பதை உணர்ந்த மத்திய அரசு, நாட்டுமக்களுக்கு போட்டி ஒன்றை வைத்தது. இந்திய ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டது.
பொதுமக்கள் அனுப்பிய அடையாளக் குறியீட்டிற்கான வடிவமைப்புகளில் இருந்து இறுதியாக ஐந்து வடிவமைப்புகளை மத்திய அரசு தேர்வு செய்து வைத்துள்ளது. அந்த ஐந்து வடிவமைப்புகளைத் தான் நீங்கள் படத்தில் பார்ப்பது.
இந்த ஐந்தில் ஒன்றுதான் இந்திய ரூபாய் நோட்டுகளில் அடையாளக் குறியீடாக இடம்பெறப் போகிறது.
அடையாளக் குறியீடு தான் நம் நாட்டு ரூபாய்க்கு இல்லையே தவிர , USD என்று அமெரிக்க டாலரையும், GBP என்று பிரிட்டன் பவுண்டையும் குறிப்பிடுவதுபோல் நம் நாட்டு ரூபாயை நாம் Rs என்றும் தமிழில் ரூ. என்றும் சுருக்கமாகக் எழுதியும் குறிப்பிட்டும் வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
-எல்லாமே தமிழ் ( மணிபாரதி )
0 Comments:
Post a Comment